அறிமுக போட்டியிலேயே சதம்... 15 வயதில் உலக சாதனை படைத்த வீராங்கனை

அறிமுக போட்டியிலேயே சதம்... 15 வயதில் உலக சாதனை படைத்த வீராங்கனை

டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Published on

லாகோஸ்,

ருவாண்டாவை சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை பானி உடாகுஷிமனிந்தே பெண்கள் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நைஜீரியாவில் நடைபெற்ற இன்விடேஷனல் மகளிர் டி20 தொடரில், கானா அணிக்கு எதிராக விளையாடிய அவர், 65 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் (அவுட் ஆகாமல்) குவித்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

Also Read
ஐபிஎல்: அதிக முறை “ஆரஞ்சு தொப்பி” வென்ற வீரர் - யார் தெரியுமா?
அறிமுக போட்டியிலேயே சதம்... 15 வயதில் உலக சாதனை படைத்த வீராங்கனை

மேலும், டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக, டி20 அறிமுக போட்டியில் கரன் ரோல்டனின் 96* ரன்கள் அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், இளம் வயதில் சதம் அடித்த சாதனை ப்ரோஸ்கோவியா அலாகோ வசம் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ருவாண்டா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. பின்னர் 211 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கானா அணி, ருவாண்டா பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ருவாண்டா அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com