அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக சதம்.. 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோஷ் இங்லிஸ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்லிஸ் அறிமுக வீரராக இடம்பெற்றார்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக சதம்.. 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோஷ் இங்லிஸ்
Published on

காலே ,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் வெறும் 90 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிவேக சதம் அடித்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதில் இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் 85 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஷிகர் தவான் - 85 பந்துகள்

2. ஜோஷ் இங்லிஸ் - 90 பந்துகள்

3. வெய்ன் சுமித் - 93 பந்துகள்

4. பிரித்வி ஷா - 99 பந்துகள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com