கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
Published on: 

லண்டன்,

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 355 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது.

3வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து 355 ரன்கள்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டாம் பென்டன் அதிகபட்சமாக 126 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அஷிதா பெர்னாண்டோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கி விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com