

ஹராரே,
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலியாவும், ஆறுதல் வெற்றிபெற ஜிம்பாப்வேயும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.