

சவுத்தாம்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது, 3-வது, 4-வது ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற் றும் கடைசி 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் இன்று (சனிக்கிழமை) நடக் கிறது. தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட் டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
தனது முதல் மூன்று ஆட்டங்களிலும் ஏமாற்றம் அளித்த 15 வயது அதிரடி ஆட்டக் காரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆட்டத்திலாவது ரன் வேட்டை நடத்துவாரா?, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி வெற்றிக் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.