கடைசி டி20: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கடைசி டி20: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on: 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 4 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

சான்ட்னர்

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஹமில்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய முதலில் பேட்டிங் செய்கிறது.

X