கடைசி டி20: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

2-0 என்ற புள்ளிகள் கணக்கில் டி20 தொடரையும் இலங்கை கைப்பற்றியுள்ளது.

கடைசி டி20: இலங்கை - பாகிஸ்தான் இன்று  மோதல்
Published on

கொழும்பு,

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இலங்கை வென்றது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் டி20 தொடரையும் இலங்கை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இலங்கை பாகிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 நாளை நடைபெற உள்ளது. தம்புலா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கையும், ஆறுதல் வெற்றிபெற பாகிஸ்தானும் போராடும் என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com