

பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ் தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலா வது டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தி லும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததுடன், தொடரையும் 0-2 என்ற கணக்கில் தாரை வார்த்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (மாலை 3.30 மணி) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வரிந்து கட்டுகிறது.பாகிஸ்தான் ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.