முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஜிம்பாப்வேக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தத் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மறுபுறம், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சில் காயம் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஒட்னியல் பார்ட்மேன், க்வெனா மபாகா ஆகியோர் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com