முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேக்கு 295 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேக்கு 295 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Published on

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா 294 ரன்கள்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மெட் ரென்சவ் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே வீரர் நியூமென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com