முதல் ஒருநாள் போட்டி: வங்காளதேசம் அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வங்காளதேச அணியில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதல் ஒருநாள் போட்டி: வங்காளதேசம் அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
Published on

மிர்பூர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணியில் பஹீம் அஸ்ராப் மட்டும் நிலைத்து விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணியில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com