

லண்டன்,
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி2, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ , சச்சிந்து கொலம்பகி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய இலங்கை 37 ஓவர்களுக்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கையை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இலங்கை தரப்பில் அந்த அணியின் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.