

லண்டன்,
இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி2, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில்,இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் ரிவர்சைட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
டி20 தொடரை இழந்த இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேபோல், டி20 தொடரை வென்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.