முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்கிறது.

இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற் சியில் ஈடுபட்டனர்.

20 ஓவர் தொடரை வென்ற உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணிக்கு மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவின் வருகை பேட் டிங் வரிசையை மேலும் வலுவூட்டுகிறது. சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சதம் விளாசிய இவர்கள் நியூசிலாந்து மண்ணிலும் ரன்வேட்டை நடத்துவதை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து மண்ணில் ரோகித் சர்மா இதுவரை சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சுப்மன் கில், ஸ்ரே யாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில்

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா இல்லாதது பலவீனமே. அதனால் முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங்கையே அணி அதிகம் நம்பி இருக்கிறது. 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு அணியை கட்டமைப்பதற்கு இந்த தொடர் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

X