

டாக்கா,
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வங்கா ளதேசம் சென்றுள்ளது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையி லான முதலாவது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் ஹென்ரி நிகோலஸ் 68 ரன்களும், டீன் போக்ஸ்கிராப்ட் 59 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச அணியில் டஸ்கின் அகமது , ஷோர்புல் இஸ்லாம் , ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 57 ரன் எடுத்தார். லிட்டன் தாஸ் 46 ரன்னில் அவுட்டானார்.தவ்ஹித் ஹிருடோய் 55 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வங்காளதேசம் 48.3 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம்26 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் டிக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.