முதல் ஒருநாள் போட்டி - பிரதிகா ராவல் அபார சதம்... ஜிம்பாப்வே அணியை எளிதில் வீழ்த்திய இந்தியா

ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய மகளிர் அணி
Published on: 

வதோதரா,

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

197 ரன்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே

இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பெலவ்டு பிசா சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர்.

இதனால் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பிரதிகா ராவல் அதிரடி சதம்

இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 96 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.

ஷபாலி வர்மா 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 34 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 27.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com