

கிங்ஸ்டன்,
இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளை யாட வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. குசல் மென்டிஸ் 72 ரன், பதும் நிசாங்கா 79 ரன், சரித் அசலங்கா 45 ரன்னும் சேர்த்தனர்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2 ஓவர்களில் 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 56 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டும், தீக்ஷனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.