

திருவனந்தபுரம்
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் கிரேவிஸ் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.