

லண்டன்,
இங்கிலாந்து , இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் சவுதம்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.