முதல் டி20: இந்தியா - ஆப்கானிஸ்தான் நாளை மோதல்

நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
முதல் டி20: இந்தியா - ஆப்கானிஸ்தான் நாளை மோதல்
Published on

டெல்லி,

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இப்ராகிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டி20

அதன்படி, இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள அர்ஜுன் ஜெட்லி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, நிதிஷ் குமார், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷோனி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா

ஆப்கானிஸ்தான்

இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.

X

Daily Thanthi
www.dailythanthi.com