முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
Published on

துபாய்,

ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஜத்ரான் 87 ரன்கள், ரசூல் 84 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து 182 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ,ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, குயின்டன் சாம்சன் 30 ரன்கள் எடுத்தார் .

இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com