

ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரையன் பென்னட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய இன்னசன்ட் கைலா மற்றும் பென் குரன் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த பிரண்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 87 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பென்னட் 71 ரன்களுடனும், மதவரே 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடைபெறும்.