இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

லண்டன்,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடரில் இந்திய அணியின் முதலாவது ஆட்டம் இதுவாகும்.

கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com