ஆஸ்திரேலியா - வங்காளதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி - இன்று தொடக்கம்

2003-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்குகிறது.
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 87.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தும் முனைப்பில் களமிறங்குகிறது.

நேருக்கு நேர் மோதல்

ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

23 ஆண்டுகளுக்கு பிறகு

2003-ம் ஆண்டுக்கு பிறகு வங்காளதேச அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த டெஸ்ட் தொடர் வங்காளதேச அணிக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com