முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 284 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 284 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on: 

டர்பன்,

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மேட் ரென்ஷாவின் அபாரமான 190 ரன்கள் உதவியுடன் 390 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் பெடிங்ஹாம் 49 ரன்களும், எய்டன் மார்க்ரம் 37 ரன்களும் எடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் கேஷவ் மகாராஜ் 34 ரன்களும், சைமன் ஹார்மர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான கேட்ச்கள் மூலமும் கவனம் ஈர்த்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது. மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com