ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேப்டனாக மோசமான சாதனை படைத்த இஷான் கிஷன்

இஷான் கிஷனின் தலைமையின் கீழ் சன்ரைசர்ஸ் அணி 3 தோல்விகளையும் 3 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேப்டனாக மோசமான சாதனை படைத்த இஷான் கிஷன்
Published on

சென்னை,

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த சீசனின் தொடக்கப் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், அணியை வழிநடத்தும் பொறுப்பு இளம் அதிரடி வீரர் இஷான் கிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையிலும் விளையாடவில்லை. கம்மின்ஸின் இடத்தை நிரப்புவது கடினமான சவால் என்றாலும், உலகக்கோப்பையில் இந்திய அணிக்காகச் சிறப்பாக விளையாடிய ஜார்க்கண்ட் வீரர் இஷான் கிஷன், அந்தப் பொறுப்பைத் துணிச்சலுடன் ஏற்றுள்ளார்.

Also Read
ஐ.பி.எல்: சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா?... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேப்டனாக மோசமான சாதனை படைத்த இஷான் கிஷன்

இஷான் கிஷன் கேப்டனாக அணியை நன்றாக வழிநடத்தி வந்தாலும், 'டாஸ்' விஷயத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் அறவே இல்லை. இந்த சீசனில் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் அவர் டாஸ் தோற்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 6 போட்டிகளிலும் தொடர்ந்து டாஸ் தோற்ற ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.

இஷான் கிஷனின் தலைமையின் கீழ் சன்ரைசர்ஸ் அணி 3 தோல்விகளையும் 3 வெற்றிகளையும் பெற்றுள்ளது. பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com