ஐ.பி.எல்: சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா?... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்

நடப்பு சீசனில் கொல்கத்தா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஐ.பி.எல்: சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா?... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

19-வது ஐ.பி.எல். தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சீசனில் கொல்கத்தா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. விளையாடிய 6 ஆட்டங்களில் 5 தோல்விகளைத் தழுவிய அந்த அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் தரவரிசையில் பின்தங்கியுள்ளது.

மறுபுறம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை அபாரமாகத் தொடங்கியது. விளையாடிய முதல் 4 ஆட்டங்களில் சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு என ஜாம்பவான் அணிகளை வீழ்த்தியது. எனினும், ஐதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 217 ரன்களைத் துரத்திய போது, வெறும் 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பின் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

Also Read
ஐ.பி.எல்: தோல்வியே காணாத பஞ்சாப் - மீண்டெழுமா லக்னோ?.. இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்: சரிவில் இருந்து மீளுமா கொல்கத்தா?... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி சற்று முன்னிலையில் உள்ளது. கொல்கத்தா 16 முறையும் ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சொந்த மண்ணில் விளையாடும் கொல்கத்தா அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடருக்குள் மீண்டு வர கடுமையாகப் போராடும். அதேநேரத்தில், கடந்த போட்டியின் தோல்வியை மறந்து ராஜஸ்தான் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com