ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை... விராட் கோலி புதிய சாதனை

அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை... விராட் கோலி புதிய சாதனை
Published on

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதியது. டாஸ் ஜெயித்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறி வித்தார்.இதையடுத்து பேட்டிங்கை தொடங்கியபெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. படிக்கல் 40 ரன்களும் , விராட் கோலி 28 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து 156 ரன் இலக்கை நோக்கி குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டும், ஷெப்பர்டு 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் 28 ரன்கள் எடுத்ததால் இந்தியாவில் 8,000 அல்லது அதற்கும் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

தற்போது 232 இன்னிங்ஸ் முடிவில் விராட் கோலி 8,016 ரன்களுடன் ஐ.பி.எல். தொடர்களில் இந்தியாவில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com