பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவிப்பு

பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.
பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக ஐபிஎல் முன்னாள் தலைவர்  லலித் மோடி அறிவிப்பு
Published on: 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய லலித் மோடி,அதன் தலைவராக இருந்தபோது, 2009 மக்களவைத் தேர்தலை காரணமாகக் கொண்டு அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்தினார். இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு அன்னியச் செலாவணி பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்தச் சூழலில், 2010-ம் ஆண்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கினார். பின்னர், இந்த முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அவருக்கு ஆயுள் காலத் தடை விதித்தது. இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இந்தியா திரும்பாத லலித் மோடி, லண்டனிலேயே வசித்து வருகிறார்

இந்தநிலையில், பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக லலித் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: 2026 நவம்பர் 14-ந் தேதி ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாக உள்ளது. எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான, தனிப்பட்ட ஒரு நிகழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டேன். நான் பிரிட்டன் குடிமகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.கடந்த 2026 செப்டம்பர் 15-ந் தேதி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ பிரிட்டன் குடியுரிமை பெற்றதை விழாவாகக் கொண்டாடினேன்.

அந்த நிகழ்வு எப்போதும் எனது மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்.பல ஆண்டுகளாக இங்கிலாந்து எனது இல்லமாக இருந்து வருகிறது. அந்நாட்டின் மக்கள், அமைப்புகள், பாரம்பரியங்கள் மற்றும் மதிப்புகள் மீது ஆழ்ந்த மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளேன். பிரிட்டன் குடியுரிமை பெறுவது ஒரு சிறப்புரிமை மட்டுமல்ல, அது ஒரு பொறுப்பும்கூட. பெருமை, நன்றியுணர்வு மற்றும் உண்மையான சொந்த உணர்வுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று லலித் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

X