வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் வீரர் தமிம் இக்பால் தேர்வு

வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற பெருமையை தமிம் இக்பால் பெற்றார்.
வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் வீரர்  தமிம் இக்பால் தேர்வு
Published on

டாக்கா,

ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடு புகாரை தொடர்ந்து அமினுல் இஸ்லாம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை, அந்த நாட்டு அரசு கடந்த பிப்ரவரி மாதம் கலைத்தது. அதன் பிறகு ஏப்ரலில் நியமிக்கப்பட்ட இடைக் கால கமிட்டியின் தலைவராக முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான தமிம் இக்பால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் டாக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டனான 37 வயது தமிம் இக்பால் போட்டியிட்டார்.

அவர் 75 பேரில் 73 கவுன்சிலர்களின் ஓட்டுகளை பெற்று 21-வது தலைவராக ஒருமன தாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற பெருமையை தமிம் இக்பால் பெற்றார். அவரது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com