தொடர் தோல்வியால் அதிருப்தி: ரிக்கி பாண்டிங்குடன் கோபமாக பேசிக்கொண்டிருந்த பிரித்தி ஜிந்தா

இந்த தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் போவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தொடர் தோல்வியால் அதிருப்தி: ரிக்கி பாண்டிங்குடன் கோபமாக பேசிக்கொண்டிருந்த பிரித்தி ஜிந்தா
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் பெற்ற தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

பஞ்சாப் அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வியாகும். இந்த தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் போவதில் சிக்கல் எழுந்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அணியால் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் நீடிக்க முடியும். தொடர் தோல்வியால் அதிருப்தி அடைந்த பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும் நடிகையுமான பிரித்தி ஜிந்தா, அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் கோபமாக உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com