ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்
Published on

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா [தென் ஆப்பிரிக்கா], ஜோனதன் டிராட் (இங்கி.,] ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்யும். கங்குலி கடந்த 2021ம் ஆண்டில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com