தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்...இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்...!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
Instagram : gavaskarsunilofficial
Instagram : gavaskarsunilofficial
Published on

மும்பை,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதற்கு அடுத்ததாக 3 முதல் 6 வரை சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல். ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோரை தேர்வு செய்துள்ள கவாஸ்கர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகேஷ் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்;

யஷஸ்வி ஜெய்ஸ்வால். ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com