கில் எடுத்த முடிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஷுப்மன் கில்லின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கில் எடுத்த முடிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்
Published on: 

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், ஆட்டம் முடிய இன்னும் 15 ஓவர்கள் மீதமிருந்தபோது இந்திய கேப்டன் கில் டிரா முடிவை ஏற்றுக்கொண்டு நியூசிலாந்து வீரர்களுடன் கைகுலுக்கியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியா வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்த நிலையில், ஆட்டத்தை முன்கூட்டியே முடித்தது சரியான முடிவா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கில்லின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கில்லின் முடிவை விமர்சிப்பது நியாயமற்றது என்று கூறிய அவர், நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், கடைசி 15 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுமார் 90 நிமிடங்கள் இந்திய பந்துவீச்சாளர்கள் முயற்சி செய்தும் அந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. அப்படியிருக்கும்போது, மீதமிருந்த 15 ஓவர்களில் மட்டும் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கப் போகிறது என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

மிட்செல் மற்றும் பிலிப்ஸ் இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியிருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை. மிட்செல் தனது அரைசதத்தை எட்டும் வாய்ப்பு மட்டுமே இருந்திருக்கும் என்றும் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கில்லின் முடிவை விமர்சித்திருந்தார். இந்தியா வெற்றிக்காக இன்னும் முயற்சி செய்திருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

X