இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு
Published on

லண்டன்,

2014-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஜெர்மனி கால்பந்து அணியில் இடம் பிடித்திருந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீருடையை அணிந்த படியும், ஒரு கையில் பேட்டுடனும், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் நன்றாக செயல்படவும், ஆட்டங்கள் திரில்லிங்காக அமையவும் வாழ்த்துகள். குறிப்பாக விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எனது ஆதரவு உண்டு. அவர் ஜெர்மனி கால்பந்து அணியின் ரசிகர். கடந்த காலங்களில் பலமுறை அவர் ஜெர்மனி கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த தாமஸ் முல்லருக்கு, விராட்கோலி டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com