கில் அனைவருக்கும் ஆதரவாக இருப்பார்: குர்னூர் பிரார் புகழாரம்

குர்னூர் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
கில் அனைவருக்கும் ஆதரவாக இருப்பார்: குர்னூர் பிரார் புகழாரம்
Published on: 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

குர்னூர் பிரார்

நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் குர்னூர் பிரார் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். அவரது சிறப்பான பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்திய அணியின் கேப்டன் கில் வீரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் தெரிவித்துள்ளார்.

கில்

இதுகுறித்து பேசிய குர்னூர் பிரார், கில் அனைவருக்கும் ஆதரவாக இருப்பார். வீரர்களின் செயல்பாட்டை மட்டும் வைத்து அவர்களை மதிப்பிட மாட்டார். அவர் தனக்காகவும், அணிக்காகவும் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்றுவ இருக்கிறார்.ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிப்பவர் அல்ல.ஒரு போட்டியில் வீரர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றாலும் அவர்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்து ஊக்கப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.

X