சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான கிளென் மேக்ஸ்வேல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கவனம் செலுத்தும் வகையில், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை மேக்ஸ்வெல் எடுத்திருக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மேக்ஸ்வெல், இதுவரை 149 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்., 3,990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 33.81 ஆகும். ஸ்டிரைக் ரேட் 126.70 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த 2023- உலக கோப்பை தொடரின் போது 201 ரன்களை அடித்து தனி ஒரு நபராக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

மூன்று சதங்கள், 23 அரைசதங்களை மேக்ஸ்வெல் அடித்துள்ளார். மேக்ஸ்வேல் பேட்டிங் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியே மேக்ஸ்வெல் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியாகும். இந்தப்போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லின் திடீர் ஓய்வு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com