பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும். இதையொட்டி இலங்கை அணி வருகிற 8-ந்தேதி பாகிஸ்தானுக்கு செல்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும் (டிச.11-15), 2-வது டெஸ்ட் கராச்சியிலும் (டிச.19-23) நடைபெறுகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடிய போது அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் இலங்கை வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். அதன் பிறகு அங்கு நடக்கப்போகும் முதல் டெஸ்ட் தொடர் இது தான்.

இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- கருணாரத்னே (கேப்டன்), ஒஷாடே பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தினேஷ் சன்டிமால், ஜனித் பெரேரா, திரிமன்னே, தனஞ்ஜெயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, எம்புல்டெனியா, சுரங்கா லக்மல், லாஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, சன்டகன்.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடந்த 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடரில் பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி விளையாட மறுத்த கருணாரத்னே, மேத்யூஸ், சன்டிமால், லக்மல் உள்ளிட்டோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com