

சென்னை,
2026 ஜூலை மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தட்டி சென்றுள்ளனர்.
இந்த விருதுகள் தொடங்கப்பட்ட 2021 ஜனவரிக்குப் பிறகு, ஒரே நாட்டின் ஆண் மற்றும் பெண் வீரர்கள் இருவருமே ஒரே மாதத்தில் இந்த விருதை வெல்வது இது 5வது முறையாகும். வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு இந்தியா இரு முறை, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா தலா ஒரு முறை இந்த சாதனையை படைத்துள்ளன. தற்போது இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸும் இணைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.
1. இந்தியா (ஜூன் 2024): ஜஸ்பிரித் பும்ரா & ஸ்மிருதி மந்தனா
2. இலங்கை (ஆகஸ்ட் 2024): துனித் வெல்லாலகே & ஹர்ஷிதா சமரவிக்ரமா
3. இந்தியா (செப்டம்பர் 2025): அபிஷேக் சர்மா & ஸ்மிருதி மந்தனா
4. தென் ஆப்பிரிக்கா 🇿🇦 (அக்டோபர் 2025): செனுரன் முத்துசாமி & லாரா வோல்வார்ட்
5. வெஸ்ட் இண்டீஸ் (ஜூலை 2026): ஜஸ்டின் க்ரீவ்ஸ் & ஹேலி மேத்யூஸ்