

புதுடெல்லி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிகப்பட்டு மோதுகின்றன.
இந்த தொடரில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குஜராத் அணியில் கில், பட்லர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
கில் 70 ரன்களும், பட்லர் 52 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பற்கு குஜராத் 210 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா மற்றும் கே.எல்.ராகுல், சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதில் கே.எல்.ராகுல் அரைசதம் கடந்த நிலையில், பதும் நிசாங்கா 41 ரன்களில் அவுட் ஆனார். இதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல்.ராகுல் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 1 பந்து மட்டுமே மிச்சம் இருந்தபோது, வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார்.
இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.