

சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுபுறம், கேப்டன் கெய்க்வாட் நிதானமாக ஆடி தனது அரை சதத்தை பதுவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் - சிதர்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. அப்போது கில் 33 ரன்கள் அடித்திருந்தநிலையில்,ஸ்டம்பிட் முறையில் அவுட்டானார். பின்னர் சுதர்சனுடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இதில் பட்லர் நிதானமாக ஆட, சுதர்சன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய சுதர்சன் 87(46) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி சென்னையை வீழ்த்தியது.