நான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் - ஹர்பஜன் சிங்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
நான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தால் அவரை அடித்திருப்பேன் - ஹர்பஜன் சிங்
Published on

லக்னோ,

கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி தோல்வியடைந்தது.

அதன்படி லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இந்த போட்டியின்போது டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் பவர்பிளே முடிந்ததும் ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது இந்த இன்னிங்ஸை கடுமையாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் கூறுகையில் :

"களத்தில் ப்ரித்வி ஷா என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். நான் மட்டும் டெல்லி அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் பிரித்வி ஷாவை அடித்திருப்பேன். ஏனெனில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போது அதனை பெரிய இன்னிங்சாக மாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாத ஷாட்டை விளையாட வேண்டிய அவசியமே கிடையாது. எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனை ப்ரித்வி ஷா மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com