

மும்பை,
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டு உள்ளார். நடப்பு ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியில் அணியை கேப்டனாக வழிநடத்தி சென்று சூர்யகுமார் யாதவ் கோப்பையை வென்றார்.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெறவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் ஆனது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,
இந்திய அணியின் டி20 கேப்டனாக ஷ்ரேயஸ் நியமிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மும்பையில் இருந்து தொடர்ந்து 3வது முறையாக ஒரு இந்திய கேப்டன் உருவாகியதற்காக, மும்பை கிரிக்கெட் குடும்பமாக பெருமைக் கொள்கிறோம்!
நாங்கள் இருவரும் இணைந்து மும்பைக்காகவும், இந்தியாவிற்காகவும் நீண்ட நாட்களாக விளையாடி உள்ளோம். என தெரிவித்துள்ளார்.