ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
image courtesy: @IPL / @gujarat_titans
image courtesy: @IPL / @gujarat_titans
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 53 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தினால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாண்ட்யாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை பிளேயிங் லெவனில் இடம் பெற்ற வீரர்கள், இம்பேக்ட் வீரர் மற்றும் கன்கசன் சப் ஆக களம் இறங்கிய வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 6 சதவீதம் (எது குறைவோ அது எடுத்துகொள்ளப்படும்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாகவும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com