ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி: ரிக்கி பாண்டிங்

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய ஆல்ரவுண்டரை இணைத்துள்ளது

ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி: ரிக்கி பாண்டிங்
Published on: 

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடியான வீரர்கள் பரிமாற்றம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பஞ்சாப்

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக இந்திய அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இரு வீரர்களும் தலா ரூ.18 கோடி மதிப்பில் இந்தப் பரிமாற்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய ஆல்ரவுண்டரை இணைத்துள்ளது

ரிக்கி பாண்டிங்

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஹர்திக் பாண்டியாவின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா இந்தியாவின் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அதேபோல், இந்தியாவின் மிகச்சிறந்த வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் ஆவார். இப்படிப்பட்ட ஒரு வீரரை எங்களது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குள் கொண்டு வந்திருப்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

X