ஆஸ்திரேலியா ஏ தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு

ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா
Published on: 

மும்பை,

ஆஸ்திரேலியா ஏ தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியநிலையில், மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா காயம்

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக விலகியுள்ளார்.

பாண்டியா விலகல்

ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் குறைந்தது 3 வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமின்றி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் பாண்டியா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

அக்டோபர் 6-ல் தொடங்கும் தொடர்

ஹர்திக் பாண்டியா மீண்டும் போட்டிகளில் விளையாடத் தொடங்குவதற்கான தேதி செப்டம்பர் 20 என ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் திட்டமிட்டபடி அவர் அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே

இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com