ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா ஓரிரு நாளில் இந்திய அணியினருடன் இணைகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா
Published on

பெங்களூரு,

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இடையி லான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் தர்மசாலாவில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார்.

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர் திக் பாண்ட்யா ஆகியோர் ஐ.பி.எல். தொடரின் போது காயத்தில் சிக்கினாலும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து அணியில் நீடிப்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவிக் கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கர்நாடகாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சியாளர்கள் மேற்பார்வையாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டதுடன், எந்த அசவுகரியமும் இன்றி 10 ஓவர்கள் முழுமையாக வீசி தனது உடல் தகுதியை நிரூபித்தார்.

அவர் ஓரிரு நாளில் இந்திய அணியினருடன் இணைகிறார். இதேபோல் ரோகித் சர்மாவும் உடல் தகுதியை நிரூபித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com