மிகுந்த அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினார் ஹர்மன்பிரீத்: ஸ்மிருதி மந்தனா பாராட்டு

இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல எனது முழு பங்களிப்பை வழங்குவதற்கும் ஆவலுடன் உள்ளேன்
மிகுந்த அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினார் ஹர்மன்பிரீத்: ஸ்மிருதி மந்தனா பாராட்டு
Published on: 

புதுடெல்லி,

ஹர்மன்பிரீத் கவுரின் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகலைத் தொடர்ந்து எதிர்பார்த்தபடியே இந்திய பெண்கள் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிர்தி மந்தனாவை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்றிரவு அறிவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் அணியில் இல்லாத சமயங்களில் ஏற்கனவே 22 சர் வதேச போட்டிக்கு மந்தனா கேப்டனாக பணியாற்றி அதில் 15-ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2013-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் மராட்டியத்தை சேர்ந்த மந்தனா கூறுகையில், 'இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது மிகச்சிறந்த கவுரவமாகும். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வு குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கும். பயணத்தின் போது புதிய விஷயங் களை கற்றுக்கொள்வதற்கும். இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல எனது முழு பங்களிப்பை வழங்குவதற்கும் ஆவலுடன் உள்ளேன். ஹர்மன்ப்ரீத்தையும், கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் அணிக்கு வழங்கிய பங்களிப்பையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மிகுந்த அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்திய அவர், எங்களது பயணத்தில் மிக முக்கியமான அங்கமாக இருந்துள்ளார். என தெரிவித்துள்ளார்.

மந்தனா இதுவரை 120 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 14 சதம் உள்பட 5,411 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 179 ஆட்டங்களில் ஆடி 2 சதம் உள்பட 4.867 ரன்களும் சேர்த்துள்ளார். இது தவிர 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com