மகளிர் பிக்பாஷ் லீக் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் இந்திய வீராங்கனைகள்.

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்கஸ் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அதே அணியில் ஹர்மான்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
மகளிர் பிக்பாஷ் லீக் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் இந்திய வீராங்கனைகள்.
Published on

மெல்போர்ன்

பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடராகும். இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் அடுத்த மாதம் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது.

இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தியா வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்கஸ் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அதே அணியில் ஹர்மான்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

இதற்கு முன்னர் ஹர்மான்ப்ரீத் கவுர் பிக்பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com