விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்த ஹர்ப்ரீத் ப்ரார்

கோலியின் விக்கெட்டை எடுப்பது என்னை பொறுத்தவரை ஒரு சாதனை என ஹர்ப்ரீத் ப்ரார் கூறினார்.
விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்த  ஹர்ப்ரீத் ப்ரார்
Published on

மொஹாலி,

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர், விராட் கோலிக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது;

“ஐபிஎல்-ல் விராட் கோலிக்கு எதிராக விளையாடும் போது ஜாலியாக இருக்கும். அவரின் விக்கெட்டை எடுப்பது என்னை பொறுத்தவரை ஒரு சாதனை. ஏனெனில் எனது அறிமுகப் போட்டியிலேயே அவரின் விக்கெட்டைதான் எடுத்தேன். அதை என்னுடைய குழந்தைகள், பேரப்பிள்ளைகளிடம் பெருமையாக கூறிக் கொள்வேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com